இசையோடு இயைந்த வாழ்வு எனது தகப்பனார் சங்கீத ஜோதி சே குரு பட் டாபிராமன் அவர்கள் மறைந்து ஒரு வருடம் ஆகப் போகிறது. 93 வருட காலம் வாழ்ந்த அவர் தம் உன்னதமான வாழ்க்கையில் நாம் பார்க்கின்ற பல சிறப்புகள் உள்ளன. ஆன்மிக வழிபாடு, கல்வித்துறையில் தன்னலமற்ற பணி , புனிதத்தலங்களுக்கு யாத்திய இருந்தாலும் நினைவு கூறத்தக்க வகையில் நாம் காண்பது இசை மேல் அவருக்கிருந்த அபரிமிதமான நாட்டமே.
அவரது எந்த முயற்சியும் இசையோடு இணைந்ததாக அவர் அமைத்துக்கொண்டார். இசையின்றி பூஜையில். இசையின்றி பயணம் இல்லை. இசையின்றி வகுப்பில். நடிப்பிலும், உறவிலும் கூட இசையை ரசிப்பவர்களையே அவர் விரும்பி அவர்களோ டு நெருங்கி பழகினார். ஆதலால், அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவருக்குப்பிடித்த சில பாடல்களை அவர் சொந்தக் குரலிலேயே ப திவு செய்வது பொருத்தமாக அமைகிறது.
முதல் பாடல் : கல்யாணி ராகத்தில் அமைந்த " மாதா உன் பாதம் பணிந்தேன்" இப்பாடல் அவரே இயற்றியது. 1950 -55 வருட காலத்தில் அதாவது அவரது இளைமையில் இயற்றப்பட்டது. இந்த ப்பாடல் எனது பாடடனாருக்கு அதாவது அவர் தந்தையாருக்கு மிகவும் பிடித்த ப்பாடல் என பல முறை அவர் குறிப்பிட்டி ருக்கிறார். இப்பாடலை முதலில் கேட்போம்.