Friday, April 27, 2012

தமிழனுக்கு பெயரே பிரச்சினை

எங்கு போனாலும் தமிழனுக்கு என்று பிரச்சினைகள் முளைத்துக்கொண்டே தான் இருக்கும் போலிருக்கிறது.


என் பெயர் எனக்குத்தெரிந்த நாளில் இருந்து சந்திரசேகரன் என்று தான் நினைத்துக்கொண்டிருந்தேன்.


இப்போது தான் பிரச்சினைகள் வந்த வண்ணமாக  ஆகி விட்டது.

சர்நேம் அல்லது குடும்பப்பெயர் இல்லாமல் வெறும் சந்திரசேகரன் என்றால் யாருக்கும் புரியவில்லை.

பான் கார்டில் எனது பெயர் சேட்லூர் , வரி ப்பத்திரத்தில் பட்டாபிராமன்  என்று எனது இனிசியல்கள்  எனது பெயராக வலம்   வர ஆரம்பித்துவிட்டன.

இந்த வம்பே வேண்டாம் சி பி என்ற என் இனிசியல்கலை  அப்படியே எழுதலாம் என்றாலோ பல கம்ப்யுடர்கள் அதை எடுத்துக்கொள்வதில்லை.


 இதனிடையில் ரயில் முன்பதிவு செய்யப்போனால் சந்திரசே எழுதியதும் இடம் இல்லை.

சந்திரசேகர் என்றால் தெரிகிறது அது என்ன ரன் என்று பல பேர் கேட்டு பதில் சொல்ல முடியாமல் பிரச்னை. 

போன வாரம் ஒரு கம்பெனியில் வரவேற்பு கவுண்டரில் ஒரு பெண்மணி கேட்டே விட்டார்.

அது என்ன உங்கள் தென்னிந்தியர்கள் மட்டும் இவ்வளவு பெரிய பெயரகளை வைத்துக்கொண்டு எங்களை கஷ்டப்படுத்துகிறார்கள் என்று.

என்ன பத்தி சொல்வது

அம்மணி இது ரொம்ப லேட் என்னால் ஒன்றும் செய்ய முடியாது . நிங்கள் எனது தந்தையாரைத்தான் கேட்க வேண்டும்.
 

No comments: