ஒரு ஆட்டோவில் அண்ணாமலை (பல்கலைக்கழக) வலம்
அண்மையில் ஒரு சொந்த வேலை காரணமாக திருக்கடையூர் சென்றிருந்தே ன் . திரும்பி வரும் போது காலை 10 மணியளவில் சிதம்பரம் வந்து சென்னை செல்லும் விரைவு வண்டியை பிடிப்பதாக ப்ளான். 10 மணிக்கு சிதம்பரம் பஸ் நிலையத்தை சேரும்போது தான் நினைவு வந்தது சென்னை விரைவு வண்டி 1230 க்கு தான் சிதம்பரம் வரும் என்பது. உடனே ஒரு சபலம். ஒரு ஆட்டோவை ப்பிடித்து இந்த 2 மணிநேரங்களில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அதாவது நான் படித்த கல்லூரியை ஒரு முறை சுற்றி வந்து பழைய நினைவுகளை அசை போடலாமே என்று ஒரு எண்ணம். உடனே அருகில் இருந்த ஆட்டோவில் 120 ரூபாய் என்று பேசி ஏறி அமர்ந்தேன். ஓட்டுனருக்கு நான் பழைய மாணவன் என்று தெரியவில்லை. ஏதோ பிசினெஸ் செய்பவர் சுற்றிபார்க்க வந்திருக்கிறார் என்று நினைத்திருப்பார் போல. ரயில் பாலம் கடந்ததும் பேச ஆரம்பித்தார்.
"சார் மொதல்ல மெடிக்கல் காலேஜுக்கு போவோம். என்று சாலையிலிருந்து கேட்டில் நுழைந்து ப்ரும்மாண்டமான கட்டிடம் முன்பு நிறுத்தினார். பாருங்க சார். இதான் மெடிக்கல் காலேஜ். "\
நான் படிக்கும்போது மெடிகல் கிடையாது. எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது. யாரவது மாணவர் இருந்தால் அவரை பிடித்து கை குலுக்கலாம் போல இருந்தது. ஞாயிற்றுக்கிழமை ஆதலால் யாரும் தென் படவில்லை. நான் நினைவலைகளில் முழுகி இருந்ததால் ஆட்டோ நகர்ந்ததை க்கவனி க் கவில்லை. திடீரென்று ஆட்டோக்காரர் பேசினார்.
"சார், இங்க தான் சார் நாவரசு மர்டர் ஆனது"
"யார் அது நாவரசு?"
ட்ரைவருக்கு ஒரு நிமிஷம் புரியவில்லை.
"என்ன சார் ஜான் டேவிட் ராக்கிங்கிலே நாவரசை கொலை செஞ்சது , புறகு பாடியை கண்டம் துண்டமா வெட் டினது பேப்ர்லே வர்லே. அந்த கொலை நடந்த இடம். பாத்துக்குங்க.
ஒரு முறைக்கு இரு முறை பார்த்துக்கொண்டேன். மனசு என்னமோ செய்தது "சரிங்க. போலாம். " என்றேன்.
பத்து வருடம் முன்னர் நடந்த துயர சம்பவம். பேப்பரில் படித்த விவரம் நினைவுக்கு வந்தது.
"சார். இங்கே தன் சார் நாலு பேர் போலீஸ் தொரத்தினப்ப ஏரியிலே குதிச்ச ஸ்பாட். பாத்துக்குங்க" ஆட்டோக் காரர் கமேண்டரியை
தொடர்ந்தார்.
" அப்படியா இது எனக்கு தெரியாதே" என்றேன்.
ஆட்டோ காரர் வண்டியை நிறுத்தினார். ."எறங்குங்க சார்"
இருவரும் இறங்கினோம். அடுத்த ஐந்து நிமிடங்கள் போலீஸ் எங்கிருந்து வந்தது மாண வர்கள் எப்படி ஓடினார்கள் "என்பது எனக்கு விளக்கப்பட்டது.
நான் திருப்தியை த்தேரிவித்தவுடன் ஆட்டோ அண்ணாமலை நகரில் மெயின் பில்டிங், ஸ்ரீனிவாச சாத்திரியார் ஹால், சென்ட்ரல் லைப்ரரி இவைகளை
க்கடந்து விடுதிகளை அடைந்தது. நாங்கள் படிக்கும்போது ஈஸ்டர்ன் ஹாஸ்டல் என்று சொல்லுவோம்.
சாலையில் காவல் துறை வைத்திருந்த தடைகளினால் நின்றோம். "பாருங்க சார், ஏதோ தகராறு அந்த ப்பக்கம் போக வேண்டாம். என்று சொல்லி எனக்கு பிளாடேனரி ய ம், அக்வேரி ய ம் . ஆகியவைகளை வெளியிலிருந்து ஆட்டோ காரர் காண்பித்தார்.
" அப்துல் கலாம் தான் சார் திறந்து வச்சார் " என்றார் டிரைவர்.
ஆட்டோ மெயின் ரோட்டில் சென்றது. "எடது பக்கம் ஏரி தெரியுதில்லை சார்".
" ஆமாம், எவ்வளவு அழகாக இருக்கிறது" என்றேன்.
" .இங்க தான் சார் உதயகுமார் விழுந்து செத்தாரு " என்று கூ றி விட்டு நிறுத்தாமல் சென்றார். அவருக்கே போரடித்து விட்டது போலும். உதய குமார் சம்பவம் நான் படித்தபோது தான் நடந்தது.
வீ சி பங்களா. பாருங்க சார். இப்ப யாரும் இல்லை. அம்மா எடுத்துக்கிட்டாங்கில்ல. " என்று லேடஸ்ட் செய்தியை த்தந்தார்.
சாலையை இரண்டாகப்பிரித்து விட்டதால் குறுகி விட்டது போல் தோன்றியது.
அரை மணி கழித்து எனது பழைய நினைவுகளுக்கு இருப் பிடம் ஆன வெஸ்டன் ஹாஸ்டல் அடைந்தோம்.
நாங்கள் உலவிய திரூவாங்கூர் விடுதியும் ராணி சீதை ஆச்சி விடுதியும் பொலிவிழந்து காணப்பட்டன. யாரும் கேட்பாரில்லை போலும். விடுமுறை நாளானதால் மாணவர் கூட்டம் இல்லை. புதிதாக ஒரு ஏ டிஎம் தெரிந்தது.
பத்து நிமிடங்கள் எல் 7 க்கு வெளிஏ நிற்பதை த்தவிர வேறு ஒன்றொன்றும் செய்ய முடியவில்லை. யாராவது தெரிந்த முகம் தென்படுகிறதா என்று ஏக்கத்தோடு பார்த்தேன்.
எப்படி தெரிந்த முகம் இருக்கும்? 40 வருடம் ஆகப்போகிறதே ?
பெட்டியை த்தூக்கிக்கொண்டு ஆட்டோவை அனுப்பி விட்டு விடுதியிலிருந்து
ரயில் பாதையை க்கடந்தேன்.
புதிய வீ டுகள் தென் பட்டன. கறுப்பு சிவப்பு கொடிகள் .பறந்ததால் இது கல்லூரி இடமாயிற்றே இங்கு எப்படி வீடு கட்டினார்கள் என்று கேட்க அவசியம் ஏற்படவில்லை.
நல்ல வெய்யில். சூடான வடையையும், காப்பியையும் வாங்கிக்கொண்டு ஒரு பெஞ்சியில் அமர்ந்தேன்.
அதென்ன யாரையுமே பார்க்காமல் போகிறோமே என்ற ஒரு குறை.
என் வலது புறத்திலிருந்து , திடீரென தெலுங்கு, கன்னடம் கலந்த தமிழ், ஊசி மணி நகைகள், , என்றோ தோய்த்த பச்சை வண்ண பாவாடை சட்டைகள் தென்பட்ட ன.
குறவர் குறத்தியர் கூட்டம் தங்கள் ஆட்சியில் இருக்கும் குடிமக்களை பார்க்க வரும் அரசர் போல நடந்து வந்து கொண்டிருந்தது.
60 வயது பெண்மணியிலிருந்து 6 மாத குழந்தை வரை ஒரு பரம்பரையே எனக்கு முன் ஊர்வலம் ஆக வந்துகொண்டிருந்தது.
எனக்குள் ஒரு ஆனந்தம் !!. தெரிந்தவர் யாரையும் பார்க்காமல் போகவில்லை.
இதே குறத்தியரும் நாம் படிக்கும்போது பார்த்தவர் தாமே
ரயில் நிலையத்தை கடக்கும் போதெல்லாம் இந்த குறவரையும், குறத்தியரையும் கடந்து தானே சென்றிருக்கிறோம். அந்த ஒரு விதத்தில் நமக்கு ஒரு உறவுதானே!
இவர்கள் யாரையும் கொல்லவில்லை. கட்சி கொ டி கட்டி மனையை ஆக்கிரமிக்கவில்லை. யார் துணை வேந்தர் என்பது இவர்களுக்கு தெரியாது.
இருப்பினும், அதே நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை. தலைமையை ஏற்றுக்கொண்டு அந்த பெண்ணின் பி ன்னே செல்லும் ஒரு கூட்டம். பெண் மாறியிருக்கிறாள். வேறு எதுவும் மாறவில்லை.
மனத்திருப்தியோடு எக்ஸ்ப்ரசில் ஏறினேன்.
.
No comments:
Post a Comment