எனது தந்தையார் சங்கீத ஜோதி குடந்தை திரு சே கு. பட்டாபிராமன் அவர்களின் பாடல்களைப் பற்றிய ஒரு திறனாய்வு
முன்னுரை:
எனது தந்தையார் அவர்கள் பல கடவுளர் மீது பாடல்கள் எழுதி அவற்றை மேடைகளில் பாடி வந்துள்ளார். இவற்றில் முருகன் மீது அவர் எழுதிய பாடல்கள் கௌமாரம் என்ற வலைத் தளத்தில் (1) வெளியாகியுள்ளன. பழனி முருகன் மீது பாடிய காவடி சிந்து போன்ற சில பாடல்கள் முருக பக்தர்களால் பாடப்பட்டும் வருகின்றன. மற்ற பாடல்கள் தொகுக்கப்பட்டு ஸ்க்ரிப்ட் (2) என்ற மின் பதிப்பு வலைத்தளத்தில் வெளியாகியிருக் கின்றன. இருப்பினும் ஒருங்கிணைந்த முறையில் அவரது பாடல்களை ப்பற்றிய ஒரு திறனாய்வு முறையே செய்யப்படவில்லை. அந்த வகையில் இந்த கட்டுரை ஒரு புதிய முயற்சியாக அமைகிறது.
பாடல்கள் வகை:
அவர் எழுதிய பாடல்களை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.
1. 1945 -50 கால கட்டத்தில் எழுதியவை
2. 1967-68 காலகட்டத்தில் எழுதியவை
3. 1990- க்கு பிறகு எழுதியவை
1. 1945-50 காலத்தில் எழுதிய பாடல்கள்;
எனது தந்தையார் இந்த காலகட்டத்தில் குடந்தையில் ஆசிரியராகப் பணி புரிந்து வந்தார். சிறு வயதிலிருந்தே பல மேடைகளில் கச்சேரிகள் செய்து வந்த காரணத்தினால் இசை கலைஞர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக்கள் அதிகம் பெற்றிருந்தார். இதன் விளைவாக தானே பாடல்கள் எழுதி அவற்றை மேடையில் பாடுவதில் ஒரு நாட்டம் ஏற்பட்டிருக்கலாம். அல்லது அவரது தாயார் ஊக்குவித்ததன் காரணமாகவும் எழுதத்துவங்கியிருக்கலாம்.
அவர் அப்போது எழுதிய பாடல்கள் வருமாறு :
No comments:
Post a Comment